“பறவைகள் இல்லாத வானம் “ பேர்லின் தலைநகரில் இளம் ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் வலி சுமந்த வாசிப்பு

தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் இளம் ஈழத்தமிழ் எழுத்தாளர்கள் மூவர் இணைந்து “பறவைகள் இல்லாத வானம்” எனும் வாசிப்பு மற்றும் கலந்துரையாடலை நேற்றைய தினம் மேற்கொண்டனர். 


மண்டபம் நிறைந்த பல்லின மக்களுக்கு முள்ளிவாய்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் துயரங்களையும் , தமிழின அழிப்பி்ன் சாட்சியாக வாழ்பவர்களின் வலி சுமந்த கதைகளையும் எடுத்துரைத்தனர். 


இறுதியாக தமிழின அழிப்பில் கொல்லப்பட்ட அனைவருக்கும் மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டு , நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் தமிழின அழிப்பின் சாட்சியாக , முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.