வெளிநாட்டு சொக்கலேட்டால் வந்த வினை!!

 


யாழில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்து வந்தவருக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

ஆனைக்கோட்டை பொது சுகாதார பரிசோதகர்களான கு.பாலேந்திரகுமார் மற்றும் கி.அஜந்தன் ஆகியோர் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அதன்போது முறையான விதத்தில் இறக்குமதி செய்யப்படாத மற்றும் நிறக்குறியீடு இல்லாத வெளிநாட்டு சொக்லேட் வகைகள் மற்றும் இனிப்பு பண்டங்கள் என்பவற்றை மீட்டிருந்தனர்.

இதனையடுத்து உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் தொடரப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணைகளில் உரிமையாளர் குற்றங்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவரை கடுமையாக எச்சரித்த நீதிமன்று ஒரு இலட்ச ரூபா தண்டம் அறவிட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.