வங்களா விரிகுடா பிராந்தியத்தில் உருவாகிறது சூறாவளி - ரீமால்.!


எதிர்வரும் 15ஆம் 16ஆம் திகதியளவில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஒரு தாழமுக்கம் உருவாகி, அது சூறாவளியாக வலுவடையும் சாத்தியம் உள்ளது.


சூறாவளி ஒன்று உருவாக வேண்டுமாக இருந்தால் அதற்கு தேவையான வானிலை நிபந்தனைகளில் கடல் வெப்பநிலையும் முக்கியமானத ஒன்றாகும்.

கடல் வெப்பநிலையானது 26.5c வெப்ப நிலைக்கு மேல் அதிகமாக காணப்பட்டால் சூறாவளி / தாழமுக்கம் உருவாவதற்கு சாத்தியம் காணப்படும். 


இதன்படி தற்போது வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் கடல் மேல்மட்ட வெப்பநிலையானது 31c - 32c அளவில் காணப்படுகின்றது. 

இதன் காரணத்தினால் எதிர்வரும் சில நாட்களில் ஒரு தாழமுக்கம் உருவாகும் சாத்தியம் உள்ளது.


எதிர்வரும் 15ஆம் அல்லது 16ஆம் திகதியளவில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஒரு தாழமுக்கம் உருவாகி, அது 17ஆம், 18ஆம் திகதியளவில் மேலும் தீவிரமடைந்து, 

அதன்பின்னர் 19ஆம் 20ஆம் திகதியளவில் மேலும் அது வலுவடைந்து எதிர்வரும் 21ஆம், 22ஆம் திகதி அளவில் ஒரிசா கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இது சூறாவளியாக வலுவடைகின்ற சந்தர்ப்பத்தில் இதற்கு Remal என்னும் பெயர் சூட்டப்படும்.


இது ஒரிசா கடற்கரையை நோக்கி செல்வதன் காரணத்தினாலும் தற்போது உள்ள வானிலை அமைப்பின் காரணத்தினால் இலங்கைக்கு நேரடியான பாதிப்புகள் எதுவும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகின்றது.


-கே.சூரியகுமாரன்

(ஓய்வுபெற்ற சிரேஷ்ட மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி)



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.