பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

 


இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர்   சிறு நீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்  துயரத்தை ஏற்படுத்தியுள்ளது   பிரித்தானியாவில் திருமணம் செய்து  மனைவி இரண்டு பிள்ளைகளுடன்  வாழ்ந்து வந்த இளம் குடும்பஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில்  இரண்டு    சிறு நீரகமும் பாதிக்கப்பட்டு நேற்று  ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.


பிரித்தானியாவில் விசா  மறுக்கப்பட்டு   நாடு கடத்தப்பட்ட நிலையில்     மீண்டும் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன்   பிரித்தானியா சென்று வாழ முயற்சிகள் மேற்கொண்டு   அதற்கான ஒழுங்குகளும்  சரிவரும் நிலையில்  இவ் துயரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.


சம்வத்தில்  இதயச்சந்திரன் சுதர்சன் வயது 41 என்ற இளம் குடும்பஸ்தரே  இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்    இச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.