முருகப்பெருமானுக்கு தமிழ் பூசைக்கு ஒரு சிலரால் கொலை முயற்ச்சி!

 


டென்மார்க்கில் தமிழுக்கு சுட்டியலால் அடி! ஆரியக்கூத்து எப்படி இருக்கு? பிறமொழியினர் தமிழரிடை ஏற்படுத்திய சாதி முறை தமிழரைப்பிரித்து வைத்துள்ளது ஆகையால் இதற்கான குற்றவாளிகள் யார் தண்டிக்கப்படுவதும் புலம்பெயர் நாடுகள்வரை வன்முறையாளர்கள் என்ற பெயரை பெறும் அப்பாவித்தமிழர்களும், பாதிக்கப்படும் தமிழர்களும் !                                                                                                                                                                                                                                            


சிரித்துக்கொண்டு தம்பிராசா என்று மென்மையாகப் பேசி வன்முறைகளை அப்பாவித்தமிழர்களிடம் துாண்டும்,சூத்திரங்கள், சமசுகிருத மந்திரங்களை ,தமிழர் மூளையால், தமிழர் உழைப்பால் கட்டப்பட்ட கோவில்களில் இருந்து அகற்றுங்கள்.                                                


 தமிழர்கோவில்களில் ஏற்றத்தாழ்வு, பாகுபாட்டிற்கான வர்களை மாற்றுங்கள், திருத்துங்கள் இல்லாத திருத்தல ங்கள் தேவையில்லை!!!

கொடியவர்களின் கூடாரமாக கோவில்கள் மூடத்தனமாகப் புராணக் கதைகளைக் கூறிக்கொண்டு இயக்கும் தவறுகளையும் அகற்றுவோம்.


 தேவர்கள் என்பதை ஏற்றால் ஏற்றத்தாள்வை ஏற்கின் றோம் என்றே பொருள்! கோவில்களில் அழகானவர் களாகவும் ,வெள்ளை நிறத்திலுமான உருவங்கள், படங்கள், சிற்பங்கள் எல்லாம் கடவுளர் ,தேவர்கள், கறுப்பானவர்கள்,மீசைகள் கடவாய்ப்பற்களுடன் உள்ளவர்கள் தமிழர்களாம்(அரக்கர்களாம்.)


 தேவர்கள், பிராமணர்கள் இவர்கள் உயர்வானவர்கள் என்ற வர்ணாச்சிரமதர்ம (சனாதன) முறையை சிற்பிகளின் மூளைகளில் பாச்சி கோவில்களில் நடைமுறையில் உள்ளது.                                                        


இவற்றை எல்லாம் எண்ணி இனிவருங்காலங் களில் சிற்பங்களில் நுால் இடுதல், நிறவேறுபாட்டுப் படங்கள் வரைதல், உருவங்கள் நிறவுதலை தமிழர்கள் தவிர்த்து இறுதியாக சமசுகிருதத்தை அறவே தமிழினத்திலிருந்து அகற்றுவதே இறுதி இலக்காக ஒவ்வொருதமிழர்களு செயற்படவேண்டும்.


முருப்பெருமான் அடியார்களுக்கு முக்கிய அறிவித்தல் !


எமது வருடாந்த திருவிழாவை குழப்புவதற்க்காக தமிழ் பூசைக்கு விருப்பமில்லாத ஒரு சிலரால் எமது மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய  இலங்கையில் இருந்து வந்திருந்த ஆலய குருவை 


சமூகவிரோதிகள் ஒரு சிலர் நேற்று இரவு நள்ளிரவில் சுத்தியலால்  கொடுரமாக தாக்கி கொலை முயற்சியல் ஈடுபட்டுள்ளனர்.


தெய்வாதீனமாக உயிர்தப்பி தற்போது ஐயா அவர்கள்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இப்படிப்பட்ட சமூகவிரோதசெயல்களில் ஈடுபடுவோரை இனங்கண்டு எமது சமூகத்திலிருந்து நீங்கள்தான் புறக்கணிக்க வேண்டும். இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபடுவோர்க்கு தண்டனை கிடைத்தே தீரும் . 


காவல்த்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது அவர்கள் வந்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். 


பொதுச்சபை முடிவுக்கிணங்க


கடந்த வருடம் போல இம்முறையும் தமிழில் திருவிழாக்கள்  நடைபெறும் 


அடியார்கள் அனைவரும் வந்து இம்முறையும் திருவிழாக்கள் எப்படி நடைபெறுகிறது என்பதை பாருங்கள் 


திருவிழா முடிந்தபிற் பாடு  மீண்டும் ஒரு கருத்துக்கணிப்பை வைத்து பெரும்பாலன அடியார்கள் எதை விரும்புகிறார்கள் பிராமணர்களையா அல்லது பிராமணர் அல்லாதவர்களையா என்பதை 


ஜனநாயக முறையிலான  ஒரு முடிவெடுக்க நிர்வாக சபை விரும்புகிறது.


இந்த கொடுரச்செயல் காரணமாக இன்றைய பூசையானது 


இரவு 09:30 மணிக்கு ஆரம்பமாகும் என்பதை மனவருத்தத்துடன் அறியதருகின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.