யாழ்பாணத்தில் பனைத் திருவிழா!

 


இலங்கைத் தாய் வட கிழக்குத் தமிழருக்கெனத் தந்த அரும் பெரும் சொத்து பனை. பயிரிடப்படாது இயற்கையிலே தானாகவே வளரும் பனைகள் இன்று கவனிப்பின்றி அழிவடைந்து செல்லும் நிலையில் உள்ளன. இந் நிலை தொடர்ந்தால் நாமும் எம் எதிர்கால சந்ததியினரும்,


விலை மதிப்பில்லாத பெரும் செல்வத்தை இழந்திடுவோம்!

நீண்டகாலம் வாழ ஆரோக்கியம் தரும் உணவைத் இழந்திடுவோம்!

இயற்கைக்குத் தீங்கில்லா பாவனைப் பொருட்களைக் இழந்திடுவோம்!

பல்லாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை இழந்திடுவோம்!

பொருளாதாரத்தில் நாம் பலம் பெறுவதை இழந்திடுவோம்!

பூமியைக் காக்கும் இயற்கைத் தெய்வத்தை இழந்திடுவோம்!

எம் இனத்தின் அடையாளங்களில் ஒன்றை இழந்திடுவோம்!


மக்களே! அழிவடைந்துவரும் பனையைக்காக்கவும், பனைசார் உணவு மற்றும் ஏனைய நன்மைகளை அனுபவித்து ஆரோக்கியம் பெறவும், இப் பாரம்பாரியத்தினை அடுத்த தலைமுறையினாரிடமும் கடத்தவும் எதிர்வரும் 26.05.2024 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணிவரை யாழ்ப்பாணம், பொன்னாலை, திருவடி நிலை எனும் பிரதேசத்தில் “பனை இருந்தால் பஞ்சம் இல்லை” எனும் தொனிப் பொருளிலான #பனைத்_திருவிழாவினை நடாத்தவுள்ளோம்.


எனவே அனைவரும் குடும்பமாக இந்த நிகழ்வில்  கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.


மேலதிக விபரங்களுக்கு எமது Whatsapp குழுவில் இணைய லிங்கை அழுத்துங்கள். 


https://chat.whatsapp.com/BNZzGM4261201lHNqWT0mR

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.