உலகின் அறிவியல் அதிசயம்!!

  


அமெரிக்காவில் உள்ள நரம்பியல் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று,   முதல் தடவையாக தலை மாற்று அறுவை சிகிச்சை முறையை உருவாக்கி வருகிறது.

 குறித்த தலை மாற்று அறுவை சிகிச்சை முறையை Brainbridge என்ற நிறுவனமே உருவாக்கி வருகிறது.

அத்துடன்,  ரொபோக்களை உபயோகப்படுத்தி தலைமாற்று அறுவைச் சிகிச்சையை எவ்வாறு செய்யலாம் என்ற அனிமேஷன் காணொளியையும் Brainbridge நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நரம்பியல் மற்றும் செயற்கை சிகிச்சை  துறையில் இதுவொரு பெரும் சாதனையாக விளங்கும் என அவர்களே கூறுகின்றனர்.

குறித்த நிறுவனமானது,  தலை மற்றும் முக மாற்று அறுவை சிகிச்சையை துல்லியமாக மேற்கொண்டு நரம்பியல் நோய்கள்,  நான்காம் கட்ட புற்றுநோய் ஆகியவற்றால் பாதிப்புற்றிருக்கும் நோயாளிகளுக்கு இது பலனளிக்கும் என்றும் கூறுகிறது.

இதேவேளை, ஒரு சிலர் இதனை அறிவியல் அதிசயம் என்றும் இன்னும் சிலர் இது இயற்கைக்கு மாறானது என்றும் கூறுகின்றனர்.

மேலும் இந்த செயல்முறை வெற்றியடைந்தால் இன்னும் 8 ஆண்டுகளில் அனைவரும் தலையை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.