விபத்தில் சிக்கிய பொலிஸ் அதிகாரி!!

 


வவுனியா - இறம்பைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாரவூர்தியுடன் பொலிஸ் அதிகாரி செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் பாரவூர்தி சாரதியை கைது செய்துள்ளனர்.

மேலும், இரு வாகனங்களையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.