மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த பொலிஸ் அதிகாரி!


பதியத்தலாவ - சரணகம பகுதியில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த பொலிஸ் பொறுப்பாதிகாரியை இராணுவ வீரர் ஒருவர் கடுமையாக தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பதியத்தலாவ - சரணகம பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான குறித்த பெண், 53 வயதுடைய பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் தொடர்பில்  இருந்துள்ளார்.

இராணுவ வீரர், தனது 28 வயது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்தவுடன், மனைவியை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டுள்ளார்.

பதியத்தலாவ - சரணகம பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான குறித்த பெண், 53 வயதுடைய பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் தொடர்பில்  இருந்துள்ளார்.

இராணுவ வீரர், தனது 28 வயது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்தவுடன், மனைவியை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டுள்ளார்.

விடுமுறையில் வீட்டுக்கு சென்றவர், மனைவிக்கு சந்தேகம் எழாத விதமாக நடந்து கொண்டார். விடுமுறையின் பின்னர், தியத்தலாவ இராணுவ முகாமுக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.  

கணவன் கடமைக்கு சென்றுவிட்டார் என பொலிஸ் அதிகாரிக்கு பெண் தகவல் கொடுத்துள்ளார். ஆனால், இராணுவ வீரர் கடமைக்கு செல்லவில்லை. இரகசியமாக திரும்பி வந்து, அருகிலுள்ள வீடொன்றில் மறைந்து இருந்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரி பெண்ணின் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், இராணுவ வீரரின் மனைவியும்,  பொலிஸ் அதிகாரியும் ஒன்றாக தங்கி இருந்துள்ளனர்.

இராணுவ வீரர் அதிகாலை 2 மணியளவில் திடீரென வீட்டுக்குள் நுழைந்த போது, இருவரும் ஒன்றாக உறக்கத்தில் காணப்பட்டனர்.

இதன்போது பொலிஸ் அதிகாரியையும், மனைவியையும் கொட்டான், கற்களால் இராணுவ வீரர் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், சமையலறையிலிருந்த அம்மிக்கல்லை எடுத்து பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலையில் தாக்கினார்.

தாக்குதலின் பின்னர், இராணுவ வீரர் காட்டுப்பாதை வழியாக பிரதான வீதிக்கு வந்து, அதிகாலை 5.30 மணியளவில் பஸ்ஸில் ஏறி மஹியங்கனை பொலிஸில் சரணடைந்தார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தியத்தலாவ மாணிக்ககந்த இராணுவ முகாமில் கடமையாற்றும் 44 வயதுடைய லான்ஸ் கோப்ரல் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  

வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த பொலிஸ் அதிகாரி மற்றும் பெண்ணை பிரதேசவாசிகள் முச்சக்கரவண்டியில் பதியத்தலாவ பிரதேச வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதுடன், காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

பொலிஸ் அதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் மஹியங்கனை பொலிஸில் சரணடைந்த லான்ஸ் கோப்ரல் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் பதியத்தலாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான 28 வயதுடைய பெண் தொடர்ந்தும் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  

Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFtA.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.