யேர்மனி ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலயமண்டலாப்ஷேக நிறைவும் சங்காபிஷேகப் பெரு விழாவும்!📸

 யேர்மனி வூப்பெற்றால் மாநகரில் வூபர்நதியோர அருகாமையில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ நவதுர்க்காதேவி ஆலய மண்டலாப்ஷேக நிறைவும் சங்காபிஷேகப் பெருவிழாவும் 15.05.2024 புதன்கிழமை இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.

 காலை 9 மணிக்கு அம்பிகைக்கு விசேஷ திவ்ய ஓமமும், பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து 1005 சங்கு கொண்டு அம்பிகைக்கு சங்காபிஷேகமும் இடம்பெற்றது. மதியம் விசஷ பூஜையுடன், நவதுர்க்கா அம்பிகை உள் வீதியுலா வலம் வந்து நிறைவாக விபூதி பிரசாதம் வழங்கப்பட்டன. அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.