உலகசாதனை படைந்த இலங்கையர்கள்!!
20 நிமிடங்களில் மணப் பெண் அலங்காரம் , ஆரி வேர்க் டிசைனிங் மற்றும் மெஹந்தி ஆர்ட் போன்றவற்றில் சோழன் உலக சாதனை படைத்த 100 அழகுக்கலை நிபுணர்கள்.
கடந்த வாரம்15ஆம் திகதி கொழும்பு குளோபல் டவர் ஹோட்டலில் 100 அழகுக் கலை நிபுணர்கள் ஒன்றிணைந்து 2 மணிநேரங்களில் செய்ய வேண்டிய மணப்பெண் அலங்காரத்தை 20 நிமிடங்களில் நிறைவு செய்து புதிய சோழன் உலக சாதனை படைத்தனர்.
அதேவேளை, மேலும் சிலர் ஊசியைப் பயன்படுத்தி செய்யும் மிகவும் நுட்பமான எம்பிராய்டரி வகையான ஆரி வேர்க் கலையில் ஏ4 தாளில் இலங்கையின் வரைபடத்திற்குள் சிங்கத்தை 20 நிமிடங்களில் வரைந்தனர்.
மேலும் சிலர் மெஹந்தி மூலம் 20 நிமிடங்களில் இரண்டு கைகளிலும் அலங்காரமிட்டு சாதனை படைத்தனர். இந்த சோழன் உலக சாதனை நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார் கீர்த்தி ஜே அழகுக்கலை மையத்தின் உரிமையாளர் கீர்த்திகா ஜயசிங்க அவர்கள். சோழன் உலக சாதனை நிகழ்வின் பல்வேறு ஒழுங்குகளை பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் மேற்கொண்டிருந்தது.
வழங்கப்பட்ட 20 நிமிடங்களில் தமது இலக்கை நிறைவு செய்த 100 அழகுக்கலை நிபுணர்களுக்கான சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம் மற்றும் பேச் போன்றவற்றை சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த மாண்புமிகு கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் அவர்களும் உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் முன்னாள் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க அவர்களும் வழங்கிப் பாராட்டினார்கள்.

சோழன் உலக சாதனை படைத்த அழகுக்கலை நிபுணர்களை அந் நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், அந்த அமைப்பின் பன்னாட்டு ரீதியிலான தலைவர்கள் மற்றும் பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷனின் நிறுவனர் பிரான்சிஸ் போன்றோர் வாழ்த்திப் பாராட்டினார்கள்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை