தமிழ் தம்பதியினர் உட்பட 8 பேர் கைது!


 தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்ற  இலங்கையைச் சேர்ந்த தம்பதி  உட்பட தப்பி செல்ல உதவிய 6 பேர் என மொத்தமாக 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இராமநாதபுரம் - வேதாளை பகுதியைச் சேர்ந்த 4 பேர் நேற்றிரவு (30-04-2024) தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் நின்று உரையாடிக்கொண்டிருந்தனர்.

இவர்கள் 4 பேர் மீதும் முன்னதாக இலங்கைக்கு ஆட்களை சட்டவிரோதமாக அனுப்பி வைத்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சந்தேகமடைந்த இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தங்கச்சிமடம் பொலிஸார் 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

தம்பதிகள் இருவர் மற்றும் இலங்கைக்கு தப்பி செல்ல உதவிய ஆறு பேர் என மொத்தமாக எட்டு பேரை தங்கச்சிமடம் பொலிஸார் கைது செய்து தங்கச்சிமடம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர்.

தங்கச்சிமடம் பொலிஸ் நிலையத்தில் உள்ள 8 பேரிடம் மத்திய, மாநில உளவுத்துறை, மரைன் பொலிஸார் மற்றும் சட்ட ஒழுங்கு பொலிஸார் அடுத்தடுத்து தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் கைதான 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.