இன்றைய வானிலை!!


நாட்டின் பல பகுதிகளிலும் இன்று(14) பிற்பகல் வேளையில் பலத்த மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.*


*நாட்டை அண்மித்து ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் நிலைமை தீவிரமடைவதே இதற்கு காரணமாகும்.*


*மத்திய, தெற்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று 100 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.*


*அதேநேரம், மேல் மாகாணத்தில் இன்று முற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.*


*இதனிடையே, மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.*


*நாட்டில் தொடர்ந்து நிலவும் மழையுடன் கூடிய வானிலையால் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.*


*பதுளை, கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இவ்வாறு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.