இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட முக்கிய குற்றவாளி!!
பாதாள உலக கும்பலின் தலைவரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான விதானகே ருவன் சாமர என்றழைக்கப்படும் "மிதிகம ருவன்" துபாயிலிருந்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை (31) காலை அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் துபாய் களியாட்ட விடுதியொன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் மிதிகம ருவன் அந்நாட்டு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கருத்துகள் இல்லை