ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் - சஜித் சந்திப்பு!!

 


ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விளக்கமளித்துள்ளார்.


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா (Yōko Kamikawa) இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை (2024.05.04) பிற்பகல் இடம்பெற்றது.


 இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இரு தரப்பினரும் நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன்,  இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடி குறித்து எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரிடம் தெரியப்படுத்தி, அதிலிருந்து விடுபட ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.


அதேபோல், இந்த ஆண்டு இந்நாட்டின் அரசியலில் ஒரு முக்கியமான ஆண்டு என்றும், முக்கியமான தேர்தல் நடைபெறுவதால் அது தொடர்பிலும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.


அத்துடன், தற்போதைய படுமோசமான ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள் சார் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர், நாட்டை மீண்டும் வழமை நிலைமைக்குக் கொண்டுவர ஐக்கி்ய மக்கள் சக்தி எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.