KFG சிக்கன் செய்வது எப்படி?


தேவையான பொருட்கள்


தயிர் - 1/2 கப்.


பால் - 1 கப்.


முட்டை - 1.


இஞ்சி விழுது – 1 டீஸ்பூன்.


பூண்டு விழுது – 2 டீஸ்பூன்.


மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்.


மிளகு தூள் – 2 டீஸ்பூன்.


உப்பு – தேவையான அளவு.


எலுமிச்சை – ½ பழம்.


கோழி துண்டுகள் – 8


மைதா - 1 கப்.


சோள மாவு - 1/2 கப்.


தனியா தூள் – ½ டீஸ்பூன்.


சீரக தூள் - 1/2 டீஸ்பூன்.


பூண்டு தூள் – 1 டீஸ்பூன்.


எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை 


🔥முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் தயிர், பால் மற்றும் முட்டையை உடைத்து ஊற்றவும்.


🔥பின்பு அதனுடன், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய் தூள், 1 டீஸ்பூன் மிளகு தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.


🔥 அந்த கலவையில் கோழி துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து ஃபிரிட்ஜில் 2 மணி நேரம் வைத்து ஊற விடவும்.


🔥பின்னர், தட்டில் மைதா, சோள மாவு, தனியா தூள், சீரக தூள், பூண்டு தூள், மிளகு தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.


🔥இதையடுத்து, ஊற வைத்துள்ள கோழி துண்டுகளை இந்த மாவு சேர்மத்தில் நன்கு கலந்து கொள்ளவும்.


🔥இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய்யை ஊற்றி நன்றாக காயவைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், தயாராக வைத்துள்ள கோழி துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான கேஎஃப்சி பிரைடு சிக்கன் தயார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.