மரக்கறி பிரியாணி(Vegetable Briyani)- 1 செய்வது எப்படி?


தேவையானவை:
  


பாசுமதி அரிசி - 2 கப், 


பெரிய வெங்காயம் - 2, 


தக்காளி - 3, 


பச்சை மிளகாய் - 2, 


புளித்த தயிர் - கால் கப்


, மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், 


மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,


 இஞ்சி + பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்,


 புதினா, மல்லித்தழை - தலா ஒரு 


கைப்பிடி, உப்பு - தேவையான அளவு, 


கேரட் - 1, உருளைக்கிழங்கு - 1,


 பட்டாணி - ஒரு கைப்பிடி, வினிகர் - 2 


டேபிள்ஸ்பூன், அரைத்த முந்திரி விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், இனிப்பில்லாத 


கோவா - 1 டேபிள்ஸ்பூன்.


தாளிக்க:  பட்டை, லவங்கம் - தலா 2, 


ஏலக்காய் - 4, 


எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், 


நெய் - 2 டேபிள் ஸ்பூன்.


செய்முறை:  அரிசியைக் கழுவி, 3 கப் தண்ணீரில் ஊறவையுங்கள். காய்கறிகளை முதலில் சொன்னது போல நறுக்கிக்கொள்ளுங்கள். குக்கரில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து, பட்டை, லவங்கம், ஏலக்காய் தாளித்து, வெங்காயம் சேருங்கள். வெங்காயத்துடன் சிறிது உப்பு, மஞ்சள்தூள், சேர்த்து நன்கு வதங்கியதும், அரைத்த இஞ்சி + பூண்டு விழுது, தக்காளி, காய்கறி, புதினா, மல்லித்தழை, சிறிது உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். பிறகு, தயிர், கோவா, வினிகர் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, ஊற வைத்த அரிசியை அந்தத் தண்ணீருடன் சேர்த்து, அரைத்த முந்திரி விழுது, தேவையான உப்பு சேர்த்து, குக்கரை மூடுங்கள். ஒரு விசில் வந்ததும், அடுப்பை ‘ஸிம்’மில் வைத்து, ஐந்து நிமிடம் வைத்திருந்து இறக்குங்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.