இந்துக்களுடைய உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களுடைய மத வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுங்கள்!


ஆண்டுதோறும் கதிர்காம யாத்திரை செல்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து மாதக்கணக்கில் தங்களுடைய குடும்பங்கள் உறவுகள் தொழில்கள் என எல்லாவற்றையும் விட்டு மழை வெயில் பாராது கடும் சிரமத்தின் மத்தியில்   கால்நடையாக உகந்தை    முருகன் ஆலயத்தை வந்தடைந்து கதிர்காம கந்தனுடைய கொடியேற்றத்திற்கு பத்து நாட்கள் இருக்கும்போது காட்டுப்பாதை  ஊடாக கதிர்காம கொடியேற்றத்தின் போது  கதிர்காமத்தை சென்றடைவது வழக்கமாக இருந்து வருகின்றது .

 


ஆனால் இம்முறை வழக்கத்துக்கு மாறாக இந்துக்களினுடைய வழிபாட்டு உரிமையை மறுக்கின்ற விதமாகவும் உலக வால் இந்துக்களின் உடைய மனதை புண்படுத்து நோக்குடன் உகந்தை  முருகன் ஆலயத்திலிருந்து காட்டுப்பாதை ஊடாக செல்வதற்கான திகதி  ஆரம்பத்தில் 2024/06/28ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த போதும் அந்தத் திகதியினை மாற்றி  024/06/30 ஆம் தேதி என குறிப்பிட்டிருந்தார்கள்  தற்பொழுது அந்த திகதியிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் 2024/07/02 ம் திகதி தான் காட்டுப்பாதை திறக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது 2ம் திகதி காட்டு பாதை திறந்து 6ம் திகதி கொடியேற்றத்திற்கு செல்வது என்பது மிகவும் சிரமமான ஒரு காரியம் நான்கு நாட்களில் மிகவும் சிரமமான பாதையூடாக கதிர்காமத்தை சென்றடைவது என்பது ஒரு சாதாரண காரியம் அல்ல

பாதயாத்திரை ஊடாக வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோய்வாய் பட்டவர்கள் சிறுவர்கள் என பலதரப்பட்ட மக்கள் நாடு பூராவும் இருந்து தங்களுடைய நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காக தான்  பாதயாத்திரை செய்கின்றார்கள்  ஆகவே குறித்தாற்போல் 2024/06/28 ம் திகதி அன்று காட்டுப்பாதையை திறந்து இந்துக்களுடைய  உணர்வுகளை புரிந்து அவர்களுடைய மத வழிபாட்டு உரிமையை மறுக்காமல்  செயற்பட வேண்டும் என்பதோடு மிக துரிதமாக இந்த திகதியினை மாற்றி இந்துக்கள் உடைய பாதயாத்திரைக்கு வழி விடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்  மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.