காணாமல் போயிருந்த இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி பாதுகாப்பாக மீட்பு!📸

இஸ்ரேல் நாட்டிலிருந்து சுற்றுலா வந்திருந்த வேளையில் திருகோணமலையில் காணாமல் போயிருந்த சுற்றுலாப் பயணி இன்று அவர் தங்கியிருந்த விருந்தகத்தில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் சல்லிகோவில் பகுதியிலிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்!!


கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தின் தகவல்களின்படி முப்படையினரும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் படி தமார் அமிதாய் என்ற இந்த 25 வயது யுவதி மீட்கப்பட்டுள்ளார்!!

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.