ஜனாதிபதி வடக்கு வந்தால் எதிர்ப்போம்!


 ஜனாதிபதி வடக்கு வந்தால் எதிர்ப்போம்.. அபிவிருத்தி தேவையில்லை  பிரச்சினையை  தீருங்கள்..அஎன்னராசா எச்சரிக்கை.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வை  ஐந்து தடவைகளுக்கு மேல் மீனவ சமூகங்கள்  சந்திப்பதற்கு மஜகர் வழங்கியும் எம்மை  சந்திக்க விரும்பாத ஜனாதிபதி வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்டால் அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என மீனவ தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்ன லிங்கம் அன்னராசா எச்சரிக்கை விடுத்தார். 


நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் எமது நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வை எமது மீனவர்களின் பிரச்சனை தொடர்பில் நேரடியாக பேசுவதற்கு அனுமதி பெற்றுத் தருமாறு கோரி ஐந்து தடவைகளுக்கு மேல் வெவ்வேறு தரப்பினரிடமும் மஜகார் வழங்கினோம் ஆனால் எம்மை சந்திப்பதற்கு அவர் விரும்பவில்லை.


வடமாகாண ஆளுநரிடம் வழங்கினோம் பருத்தித்துத்துறை பிரதேச செயலகத்தில் வழங்கினோம் யாழ் மாவட்ட செயலகத்துக்கு வழங்கினோம் அதுமட்டுமில்லாது ஜனாதிபதி செயலகத்திற்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பினோம்  இதுவரை  பதிலும் கிடைக்கவில்லை சந்திப்பதற்கு நேரமும் கிடைக்கவில்லை.


இந்தியா மீனவர்களின் ஆத்துமீறால் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் இவ்வாரம் இலங்கை வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெய்சங்கருடன் ஜனாதிபதி இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய பிரச்சனை தொடர்பில் எதுவும் பேசவில்லை என அழைக்கிறோம். 


எமது மீனவர்களின் வாழ்வாதாரம் இந்திய மீனவர்களினால் அழிக்கப்படுவது தொடர்பில்  நாட்டின் ஜனாதிபதி  இந்தியா வெளிவிகார அமைச்சருடன் பேசாமை கவலையளிக்கிறது. 


தமிழ் அரசியல்வாதிகள் மீனவர் பிரச்சினை தொடர்பில்  இந்தியா தரப்புகளுடன் அழுத்தமாக பேசாமை எமக்கு கவலை அளிப்பதுடன் அவர்கள் மீது நம்பிக்கை இழக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது. 


தமிழ அரசியல்வாதிகள் எமது பிரச்சினை தொடர்பில் அழுத்தமாக சம்பந்தப்பட்டவர்களுடன் பேசாது விடுவார்களானால் எமக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் அப்போது அதனை நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம்.


மேலும் ஜனாதிபதி வடக்கை அபிவிருத்தி செய்கிறேன் என வடபகுதிக்கு வருகிறார் எமக்கு உங்கள் அபிவிருத்தி தேவையில்லை எங்கள் கடலை பாதுகாத்து தாருங்கள் வடக்கின்  அபிவிருத்திக்கு மீனவ சமூகம் பங்களிப்புச் செய்யும். 


மேலும் அபிவிருத்தி என்ற போர்வையில் பல் தேசியக் கம்பனிகளுக்கு எமது வளங்களை அரசாங்கம் விற்பனை செய்து வரும் நிலையில் அதனை  நிறுத்த வேண்டும்.


வடக்கு கடல் ஆய்வுக்கூட்படுத்தப்படாமல் பல் தேசிய கம்பெனிகளுக்கு விற்பனை செய்வதை மீனவ சமூகம் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில் தொடர்ச்சியாக விற்பனை செய்வதற்கான முயற்சிகள் திரை மறைவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


ஆகவே நாட்டின் ஜனாதிபதி வடபகுதி மீனவர்களின் பிரச்சனை தொடர்பில் பேசுவதற்கு தயாராக இல்லை என்றால் அவர் வடக்குக்கு விஜயம் மேற்கொள்ளும் போது ஜனநாயக வழியில் எமது போராட்டங்களை முன்னெடுப்போம் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.