உலகின் பாதுகாப்புத் துறையில் மிக உயர்ந்த மார்ஷல் பதவி !


ஐக்கிய சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு உலகின் பாதுகாப்புத் துறையில் மிக உயர்ந்த மார்ஷல் பதவி விரைவில் வழங்கப் படவுள்ளது.
அரசாங்கத்திடம் பொன்சேகா விடுத்த கோரிக் கைக்கமைய, ஆறு நட்சத்திர ஜெனரலாக கருதப்படும் ‘மார்ஷல்’ பதவி அவருக்கு வழங்கப்படவுள்ளது.
வடக்கின் யுத்த வெற்றிக்காக பொன்சேகா ஆற்றிய தியாகத்தை கருத்தில்கொண்டு இதற்கு முன்னர் பீல்ட் மார்ஷல் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
அவருக்கு இம்முறை வழங்கப்பட உத்தேசிக்கப் பட்ட மார்ஷல் பதவி இதற்கு முன்னர் உலகின் பிரபல அரசியல் தலைவர்கள் மற்றும் இராணுவத் தலைவர்கள் பலருக்கு அந்நாட்டு அரசுகளால் வழங்கப்பட்டிருந்தது.
யூகோஸ்லாவியாவின் முன்னாள் ஜனாதிபதி மார்ஷல் டிட்டோ, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் வொஷிங்டன், ரஷ்யாவின் முன்னாள் தலைவர் ஜோசப் ஸ்டாலின், சீனாவின் முன்னாள் தலைவர் மாவோ சேதுங், வடகொரி யாவின் முன்னாள் தலைவர் கிம் இல் சுங், ஜெர்ம னியின் முன்னாள் போர்த் தலைவர் ஹெர்மன் கோரிங் மற்றும் பிற உயர்மட்ட ரஷ்யாவின் தலைவர்கள் இதற்கு முன் மார்ஷல் பட்டத்துடன் கெளரவிக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.