நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கைது!!

 


இணையம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் வெளிநாட்டு பிரஜைகள் உட்பட 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது .

நாட்டில் வெவ்வேறு இடங்களில் தங்கியிருந்து சந்தேக நபர்கள் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது .

இதன்படி, தலங்கம - ஹெயினடிகும்புர பகுதியில் உள்ள வீடொன்றைச் சுற்றிவளைத்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், 19 பேரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 09 மடிக்கணினிகள் மற்றும் 59 கையடக்கத் தொலைபேசிகளை கைப்பற்றியுள்ளனர் .

நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் உள்ள விடுதியொன்றில் சோதனை நடத்திய போது, மேலும் 30 பேர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடமிருந்து 40 கணினிகள் , நிதி மோசடிக்குப் பயன்படுத்திய 38 கையடக்கதொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.