ஆந்திரா மட்டன் பிரியாணி செய்வது எப்படி?


தேவையான பொருள்கள்:


1. மட்டன்

2. வெண்ணெய்

3. எண்ணெய்

4. பாஸ்மதி அரிசி

5. லவங்கம்

6. ஏலக்காய்

7. சோம்பு

8. பிரின்ஜி இலை

9. பட்டை

10. பெரிய வெங்காயம்

11. உப்பு

12. மஞ்சள் தூள்

13. மிளகாய்த்தூள்

14. மல்லித்தூள்

15. கறி மசாலா

16. இஞ்சி,பூண்டு விழுது

17. தக்காளி

18. புதினா

19. கொத்தமல்லி தழை

20. கருவேப்பிலை

21. பச்சை மிளகாய் நீளமாக நறுக்கியது


செய்முறை:


குக்கரில் தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள், (இஞ்சி,பூண்டு விழுது), மட்டன் சேர்த்து 12 விசில் வரும் வரையில் காத்திருந்து பின்னர் இறக்கவும்.


இப்பொழுது குக்கரில் பிரஷர் இறங்கிய மாத்திரத்தில் வெண்ணெய், எண்ணெய், பட்டை, லவங்கம், ஏலக்காய், சோம்பு, பிரின்ஜி இலை, வெங்காயம், பாதி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.


பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும் (எண்ணெய் மிதக்கும் வரை வதக்குவது மிகவும் முக்கியம்).


இப்பொழுது பச்சை மிளகாய், தக்காளி, புதினா, கொத்தமல்லி தலை சேர்த்து நன்கு வதக்கவும்.


பின்னர் இப்பொழுது வேக வைத்த மட்டனை (தண்ணீர் இல்லாமல்) சேர்த்து நன்கு எண்ணெய் மிதக்கும் வரையில் வதக்கவும்.


பின்னர் மீண்டும் மிளகாய்த்தூள், தனியாதூள், கறி மசாலாதூள் சேர்த்து வதக்கவும்.


பின் ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் சேர்த்து லேசாக வதக்கவும்.


இப்பொழுது நான்கு கப் தண்ணீர் (அதாவது மட்டன் வேக வைத்த தண்ணீரைக் கூட நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்) விட்டு உப்பு, காரம் பார்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.


பிரஷர் இறங்கும் வரையில் மீண்டும் காத்திருந்து, பிரஷர் இறங்கியதும் குக்கரை திறந்து கருவேப்பிலை சேர்த்து பரிமாறவும்.


இதோ இப்போது சுவையான ஆந்திரா மட்டன் பிரியாணி தயார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.