விசாரணையில் சிக்கிய பிரபல வர்த்தகர்!!


காசைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் யாழ்.  வர்த்தகர் ஒருவர்  பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் பகுதியில் பிரபல வர்த்தகர் ஒருவர் பணத்தை காலால் மிதிக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

இச்சம்பவம் தொடர்பில் உயர் பொலிஸ் பீடத்தினால் வழங்கப்பட்ட கட்டளைக்கு அமைய விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேற்படி வர்த்தகர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு நேற்றையதினம் (22-06-2024) அழைக்கப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் சட்டங்களுக்கு அமைய பணத்தைச் சேதப்படுத்துவது குற்றமாகும். 

மூதல் கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில்,  இச்செயல் மக்கள் மத்தியில் பேசுபொருளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.