பணத்தை வேண்டும் என மிதிக்கவில்லை-.தியாகி தெரிவிப்பு

 பணத்தை வேண்டும் என மிதிக்கவில்லை.. சந்தோஷத்தில் செய்துவிட்டேன்...தியாகி தெரிவித்தார்.


  நான் மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் பல கோடி ரூபாய்களை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அள்ளி வழங்கியவன்.


அண்மையில் மக்களுக்கு பல கோடி ரூபாய் அள்ளி வழங்கிய பின் எஞ்சிய பணம் சட்டப் பையனுள் மீதியாக இருந்த நிலையில் கொடுப்பதற்கு யாரும் இல்லை என்ற சந்தோஷத்தின் மிகுதியால் என்னை மறந்து பணத்தை கீழே போட்டு காலினால் மிதித்து விட்டேன் .


பணத்தை மிதித்தது தவறு அதை நான் வருத்தத்துடன் தெரிவிக்கிறேன் ஆனால் என்னை பொருத்தவரையில் பணம் வெறும் கடதாசி தான்.


என்னை விட பல கோடீஸ்வரர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறார்கள் ஆனால் இங்கு பணத்துக்காக ஏழைகள் ஒவ்வொரு நொடியும் ஏங்குகிறார்கள் .


வேலைகள் பணத்துக்காக தூங்கும்போது கோடீஸ்வரர் கைகளில் இருக்கும் பணம் வெறும் கடதாசி தான் இயன்றவரை அதனை மற்றவர்களுக்கு கொடுக்க முன் வர வேண்டும். 


சில சமூக வலைத்தளங்கள் தமது வருவாய்க்காக நான்  தவறுதலாக காலினால்  மிதித்த வீடியோவை தமது வருமானத்துக்காக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்கள். 


அவர்களை நான் குறை கூறவில்லை தங்கள் வருமானத்துக்காக என்னை பயன்படுத்தி விட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்a

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.