ஆசிரியையுடன் காதல் கொண்ட தாய் இறுதியில் ஊரை விட்டு ஆசிரியையுடன் ஓட்டம் - !

 


மகளை அழைத்துவர பாடசாலைக்கு செற்றுவரும் போது மகளின் வகுப்பு ஆசிரியையுடன் காதல் கொண்ட தாய் இறுதியில் ஊரை விட்டு ஆசிரியையுடன் ஓட்டம் - கண்டியில் சம்பவம் 


எம்மை பிரிக்க முடியாது. நாம் இருவரும் ஒரே வீட்டில் தான் ஒன்றாக வாழ்வோம்...’’ என கூறியத்துடன் பிள்ளைகள் மற்றும் கணவரிடம் செல்ல மறுத்த இரண்டு பெண்கள் குறித்த செய்தியை கண்டி பொலிஸார் தெரிவித்தனர்


இருபத்தி ஒன்பது வயது மற்றும் முப்பத்தைந்து வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய்மார்களே இவ்வாறு கதறி அழுது தம்மை பிரிக்க வேண்டாம் என கோரியுள்ளனர்.


இந்த இரண்டு பெண்களுக்கும் தலா பதினைந்து வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், கணவர்கள் மற்றும் குழந்தைகள் வந்து பெண்களை ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


அப்போது, ​​வீட்டுக்கு செல்ல மறுத்த இந்த பெண்கள், தனித்தனியாக செல்ல முடியாது என போலீசாரிடம் கதறி அழுதுள்ளனர்.


29 வயதுடைய பெண் ஒரு ஆசிரியை என்பதுடன் 35 வயதுடைய தாய் ஒருவருடன் ஓரின உறவில் பழகி உள்ளார்.


குறிப்பிட்ட தாய் தனது குழந்தையுடன் பாடசாலைக்கு செல்லும் போது ஆசிரியை உடன் காதல் உறவு கொண்டுள்ளார் .


கடந்த ஒரு மாத காலமாக அவர்கள் காணாமல் போயுள்ளதாக கணவர்கள் வத்தளை பொலிஸாரிலும் கந்தானை பொலிஸாரிலும் முறைப்பாடு செய்துள்ளனர்.


கடந்த வாரம் முதலாம் திகதி இந்த இரண்டு பெண்களும் கண்டி தலதா மாளிகையில் பிரசன்னமாகியிருந்த போது, ​​இரு பெண்களின் நடத்தையில் கடும் வித்தியாசம் காணப்பட்டதை அவதானித்த தலதா மாளிகை பொலிஸார் அவர்களை கைது செய்து கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


இதனையடுத்து பொலிஸாரின் விசாரணைகளின் அடிப்படையில் வத்தளை மற்றும் கந்தானையில் காணாமல் போன பெண்களை இனங்கண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.


இரு பெண்களும் எச்சரிக்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கண்டி பொலிஸார் தெரிவித்தனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.