காட்டாறு வெள்ளம் - சுவிசில் A13 வேகவீதி துண்டாடப்பட்டது !

 


சுவிற்சர்லாந்தில் கடந்த சில தினங்கள் பெய்து வரும் பெருமழைகாரணமாக, பல இடங்களிலும் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது.


 குறிப்பாக சுவிற்சர்லாந்தின் தென்பகுதியிலும், வலே பகுதியிலுள்ள செமாற் பகுதியிலும், ஏற்பட்ட காட்டாற்று பெருவெள்ளம், பல வீடுகளையும், வீதிகளையும் அடித்துச் சென்றுள்ளது.


திச்சினோ கிறபுண்டன் மாநிலங்களூடாகச் செல்லும் ஏ13 வேகவீதி, லொஸ்தாலோ பகுதியில் முற்றாகத் துண்டாடப்பட்டுள்ளது. உள்ளூர் சாலைகளும் சேதத்துக்குள்ளாகியுள்ளன. வெள்ளம் வடிந்தபின் உடனடியாகத் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பெற்றாலும் இப்பெருந்தெருப்பாதையூடான பயணங்கள் மீளவும் தொடங்குவது தாமதமாகலாம் என்பதனால் மாற்றுவழிப் பயணங்கள் குறித்து, காவல்துறையினர் ஆராய்ந்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.