நாளை பாடசாலைகளுக்கு விடுமுறையா!!


இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.


 இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளை (03-05-2024) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது தொடர்பில், மாகாண கல்வி அதிகாரிகளுக்கு தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

கடும் மழையுடனான வானிலையினால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.