அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம்!


அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர் பசறை பிபிலை வீதியில் 13 ம் கட்டை 30 ஏக்கர் பகுதிக்கு செல்லும் வீதியில் கீழ் பகுதியில் உள்ள இரப்பர் தோட்டத்தில் 40  .45வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர் இன்று காலை இரப்பர் தோட்டத்தை பார்வையிட சென்ற தோட்ட காவலாளி மற்றும் தோட்ட அதிகாரி இருவரும் இரப்பர் தோட்டத்தை பார்வையிட சென்ற போதே சடலம் கிடப்பதை அவதானித்து உள்ளதாகவும் பின்னர் தோட்ட உயர் அதிகாரிக்கு அறிவித்து விட்டு பொலிஸாருக்கு அறிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.