டெங்கு அபாய வலயமாக 5 மாவட்டங்கள்!!


இலங்கையில்   5 மாவட்டங்கள் டெங்கு அபாயமிக்க மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு , கம்பஹா, களுத்துறை , கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் ஜூன் மாதத்தின் முதல் 5 நாட்களில் 497 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 25,417 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 9 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதால், பொது மக்கள் அனைவரும் தங்களது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.