மாஸாக திரையில் கல்கி!!

 


இந்திய சினிமாவில் அதிக பட்ஜெட் ஆன நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல், அமிதாப், தீபிகா படுகோன் என பல நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்துள்ள கல்கி எப்படியுள்ளது என்பதை பார்ப்போம்.


படத்தின் ஆரம்பத்திலேயே மகாபாரத போர் நடந்து முடிகிறது, இதில் துரோணாச்சார்யா மகன்(அமிதாப் பச்சன்) பாண்டவர் குடும்பத்தில் கருவில் உள்ள குழந்தையை அழிக்கிறான்.


இதனால் கோபமான கிருஷ்ணன் உனக்கு மரணமே இல்லை, உடல் முழுவதும் இரத்தம் வழிந்து நான் கலியுகத்தில் ஒரு தாயின் வயிற்றில் இருக்கும் போது, என்னை நீ காப்பாற்ற வேண்டும், அப்போது தான் உன் சாபம் தீரும் என்கிறார்.


6000 வருடங்கள் ஓடி 800 வருடமாக உயிரோடு இருக்கும் யாஷ்கின்(கமல்) உலகின் கடைசி நகரமான காசியில் மக்களை அடிமை படுத்தி ஒரு ஊரை உருவாக்கி வைத்துள்ளார்.


அந்த ஊரில் ஒரு பவுண்டி ஹண்டராக பிரபாஸ் வர, ஒன் மில்லியன் யூனிட் இருந்தால் கமல் இருக்கும் காம்ப்ளஸ்குள் வரலாம் என்று ஒரு விதி, இதற்காக பிரபாஸும் போராட, அதே நேரத்தில் கமல் பல பெண்களின் கருவில் இருந்து ஒரு சீரோம் எடுக்க முயற்சிக்கிறார்.


அப்போது அங்கிருக்கும் தீபிகா படுகோன் வயிற்றில் ஒரு குழந்தை உருவாக, அதில் சீரோம் எடுக்கும் போது அது கிருஷ்ணன் தான் என்பது தெரிய வர, அமிதாப் பல வருட தவிப்பிற்கு பலனாக தீபிகாவை தேடி வர, இதற்கு பிரபாஸ் எந்த விதத்தில் உதவுகிறார், அதோடு கமல் நினைத்ததை அடைந்தாரா என்ற பிரமாண்டமே இந்த கல்கி.


மஹாபாரம் என்ற ஒரு mythology களத்தை கையில் எடுத்துக்கொண்டு அதற்கு ஒரு சீக்குவல் இருந்தால் எப்படியிருக்கும் என்ற அசுர கண்ணோட்டத்துடன் நாக் அஷ்வின் இன்றைய காலக்கட்ட டெக்னாலஜி பொருத்தி இதை கையாண்டதற்காகவே பெரும் பூங்கொத்து கொடுக்கலாம்.


பிரபாஸ் பாகுபலி-க்கு பிறகு அனைத்து தரப்பினருக்குமான படம் கொடுப்பத்தில் கொஞ்சம் தடுமாற, இந்த கல்கி அதை முறியடித்து பிரபாஸை உச்சத்திற்கு மீண்டும் கொண்டு செல்லும்.


ஆனால், இதில் பிரபாஸை விட அசுவத்தாமன் ஆக வந்த அமிதாப் தான் ரியல் ஹீரோ, 6000 வருடம் மேல் உயிரோடு ஒரு உயிரை பாதுக்காக்க அவர் எடுக்கும் தவம், அந்த குழந்தை உருவானதும் ஒரே ஆளாக அமிதாப் ஆடும் ஆட்டம் ருத்ரதாண்டவம்.


அதோடு அந்த கருவை சுமக்கும் பெண்ணாக தீபிகா படுகோன், அவரை காப்பாற்ற போராடும் அண்ணாபென், ஷோபனா, பசுபதி என அனைவரும் நிறைவான நடிப்பு.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.