கணவன் அரங்கேற்றிய கொடூரம்!!

 


கொழும்பு - தலஹேன பிரதேச வீடொன்றில் கணவன் நண்பருடன் இணைந்து மனைவியை கொலை செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சம்பவத்தில் 31 வயதுடைய மனைவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் தனது கணவருடன் வாடகை வீடொன்றில் வசித்து வந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபரும், அவரது நண்பர்களும் கூரிய ஆயுதத்தால் வீதியில் வைத்து பெண்ணை கொலை செய்துவிட்டு வீட்டின் கதவை பூட்டி விட்டு சென்றுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


சம்பவம் தொடர்பில் ஹிகுரக்கொட பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான உயிரிழந்த பெண்ணின் கணவரும் கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய மற்றைய சந்தேக நபரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலும் கொலைக்கான காரணம் வெளியாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.