இலங்கை தொடர் போட்டிகளை ஆன்லைனில் லைவ் ஆக பார்ப்பது எப்படி?


 வெற்றியுடன் தொடங்குமா சூரியகுமாரின் படை? இலங்கை தொடர் போட்டிகளை ஆன்லைனில் லைவ் ஆக பார்ப்பது எப்படி?

 

இந்தியா மற்றும் இலங்கை டி20, ஒருநாள் போட்டிகளின் அட்டவணை தேதி, லைவ் ஸ்ட்ரீமிங் முழு விபரம்

இலங்கை மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. 


இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, நாளை மறுநாள் சனிக்கிழமை (ஜூலை 27) முதல் பல்லேகலேயில் தொடங்கும் இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி சூரியகுமார் யாதவ் தலைமையில் களமிறங்குகிறது. 


டி20 போட்டிகளில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில், டி20 தொடரை தொடர்ந்து ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை வழிநடத்துகிறார். டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியுடன் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பிரியாவிடை கொடுத்தார். இதனால், அவரது பதவியில் கவுதம் கம்பீர் நிமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளராக அவருக்கு இது முதல் தொடர் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 


வனிந்து ஹசரங்கவிடம் இருந்து சரித் அசலங்க கேப்டனாக பொறுப்பேற்றார். இதேபோல் கிறிஸ் சில்வர்வுட்டுக்கு பதிலாக சனத் ஜெயசூரிய இடைக்கால தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். இந்த மாற்றங்கள் மூலம் இலங்கை கிரிக்கெட் நல்ல முன்னேற்றத்தை வெளிப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியா மற்றும் இலங்கை டி20 போட்டிகளின் அட்டவணை


ஜூலை 27: பல்லேகலே - முதலாவது டி20


ஜூலை 28: பல்லேகலே - 2வது டி20


ஜூலை 30: பல்லேகலே - 3வது டி20ஐ


இந்தியா மற்றும் இலங்கை ஒருநாள் போட்டிகளின் அட்டவணை


ஆகஸ்ட் 2: முதலாவது ஒருநாள் போட்டி கொழும்பு


ஆகஸ்ட் 4: 2வது ஒருநாள் போட்டி கொழும்பு


ஆகஸ்ட் 7: 3வது ஒருநாள் போட்டி கொழும்பு. 


இந்தியா vs இலங்கை: டி20 தொடருக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் 


இந்திய அணி: சூரியகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரின்கு சிங், ரியான் பராக், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அகமது, முகமது. சிராஜ்.


இலங்கை அணி: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிஸ்ஸங்க, குசல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, சமிந்து தீக்ஷன, மதீஷான, விக்ரமசிங். அசித்த பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ.


இந்தியா vs இலங்கை அணிகள்: ஒருநாள் தொடருக்கான இரு அணி வீரர்கள் பட்டியல் 


இந்திய ஒருநாள் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), ஹப்மேன் கில் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, கே.எல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே, குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா.


கடந்த ஆண்டு அகமதாபாத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதி தோல்விக்குப் பிறகு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இலங்கை ஒருநாள் அணி - இன்னும் அறிவிக்கப்படவில்லை. 


இந்தியா vs இலங்கை தொடர் நேரடி ஒளிபரப்பு விவரங்கள் 


இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடர் எப்போது தொடங்குகிறது?


இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் ஜூலை 27ஆம் தேதி சனிக்கிழமை தொடங்குகிறது.


இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகள் நடக்கும் நேரம் என்ன?


இந்தியா மற்றும் இலங்கை டி20 ஐ தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு தொடங்கும். ஒருநாள் போட்டிகள் இந்திய நேரப்படி பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கும்.


இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடரின் நேரலை ஒளிபரப்பை இந்தியாவில் எப்படி பார்ப்பது?


இந்தியா மற்றும் இலங்கை போட்டிகளை டி.வி-யில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் ஒளிபரப்புகிறது.


இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான தொடரின் நேரலை ஒளிபரப்பை இந்தியாவில் ஆன்லைனில் லைவ் ஆக எப்படி பார்ப்பது?


இந்தியா மற்றும் இலங்கை தொடரை ஆன்லைனில் சோனி லிவ் இணைய தளத்தில் நேரலையில் பார்க்கலாம். அத்துடன், சோனி லிவ் ஆப் மூலமாகவும் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.