கொக்குவில் வாராஹிபுரம் ஶ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் இன்று விசேட பூசை!
பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இன்று 21-07-2024 மாலை 4.00 மணிக்கு கொக்குவில் வாராஹிபுரம் ஶ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் மூலமூர்த்தி வாராஹி அம்பிகைக்கும், ஶ்ரீ சக்கரத்திற்கும் விஷேட அபிஷேக ஆராதனை, பூஜை வழிபாடுகள் என்பன இடம்பெறும்.
பெளர்ணமி, முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். இந்த நாளில், நல்ல அதிர்வலைகள் உலகில் வியாபித்திருக்கும். அப்பேர்ப்பட்ட சக்தி மிகுந்த நாளில், வாராஹி வழிபாடு செய்வது தீயசக்தியில் இருந்து நம்மைக் காக்கும். வாராஹி கோயிலுக்குச் சென்று பெளர்ணமி நன்னாளில் நெய் விளக்கு ஏற்றி வழிபடுங்கள்.
அன்னை மலரடி வணங்குவோம்! வாழ்வின் வளம் யாவும்பெறுவோம்! ஓம்கீரீம் வாராஹிதாயே போற்றி!போற்றி!
கருத்துகள் இல்லை