அரசியல்வாதிகளால் சுகாதார மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் வெறும் கண்துடைப்பு!


வடமாகாண சுகாதார மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் வெறும் கண்துடைப்பு- வைத்தியர் அர்ச்சுனா


வடக்கு மாகாண சுகாதார மேம்பாடு தொடர்பாக அண்மையில் வடக்கு மாகாண சபையில் இடம்பெற்ற கலந்துரையாடல் மக்களுடைய அபிப்பிராயங்களை உள்ளடக்காத வெறுமனே ஓர் கண் துடைப்பு நிகழ்ச்சி நிரல் என வைத்தியர் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.


நேற்று வியாழக்கிழமை சாவகச்சேரியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரி வித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;


வடக்கு மாகாண சுகாதார மேம்பாடு தொடர்பில் மாகாணசபை கட்டடத்தில் இடம்பெற்ற கூட்டத்திற்கு நான் செல்வதாக இருக்கவில்லை. நான் அந்தத் தினத்தில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றிருந்தேன்.


ஆனால் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் என்னை தொலைபேசியில் அழைத்ததால் 11.15மணியளவில் அங்கே சென்றிருந்தேன். அங்கே ஓர் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே கலந்துரையாடல் இடம்பெற் றுள்ளது.  எங்கள்  அரசியல்வாதிகள் இதில் கலந்து கொண்ட போதிலும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை யின் பிரச்சினைகள் தற்காலிக தேவைப்பாடுகள் குறித்து அவர்கள் எவருமே பேசவில்லை. 


பல்லாயிரக்கணக்கான மக்கள் கதவடைத்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் நலனுக்காக போராடிய போதிலும் இந்தக் கலந்துரையாடலுக்கு வந்த 95 சதவீதமான அரசியல் பிரமுகர்களும்  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை என்று ஒன்று இருப்பதாகவே காட்டிக்கொள்ளவில்லை.


சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை தொடர்பாக ஒரு பொதுமகன் எழுந்து கதைத்த போது கைது செய்தனர். இது ஓர் கண்துடைப்பு நிகழ்சி நிரல் என்பதால் நான் அங்கிருந்து வெளியேறி விட்டேன். நான் சாவகச்சேரி வந்த பின்னர் அமைச்சர் என்னை தேடுகிறார் என்றனர்.


நான் சாவகச்சேரி வந்து விட்டேன். மீண்டும் வருவதானால் நேரம் கடந்து விடும் என்றேன். பின்னர் அமைச்சர் மன்னார் செல்கிறார் அங்கு வந்து சந்திக்குமாறு கூறினார்கள். ஆனால் நான் அதற்கு மறு த்து விட்டேன். அதன் பின்னர் என்னை இன்று (நேற்று 18.07)

சுகாதார அமைச்சிற்கு வருமாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மத்திய சுகாதார அமைச்சிற்கு அழைக்கப்பட்டுச்  சென்றுள்ள போதிலும் இன்று வரை வைத்தியர்களுக்குரிய வைத்தியசாலை தங்குமிட விடுதியை மீள ஒப்படைக்கவில்லை.

இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தெரிவித்த சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர்,நாம் வலிந்து தொழிற்சங்கப் போராட்டத்திற்குத் தள்ளப்படுவோம் என எச்சரிக்கை விடுத்து ள்ளனர்.

 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.