மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவு!


மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை ஆராய்ந்த பின்னர் இம்மாதம் 15ஆம் திகதி இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் மின்சாரக் கட்டணத் திருத்தங்கள் தொடர்பான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அண்மையில் சமர்ப்பித்தது.

குறித்த முன்மொழிவுகளின்படி, குறைக்கப்படும் கட்டணங்களின் ஒட்டுமொத்த சதவீதம் 13.8 வீதம் எனத் தெரிவிக்கப்பட்டது.


இதேவேளை, குடும்ப அங்கத்தவர்களின் கட்டணத்தில் 25.5 வீதமும் மத மற்றும் தொண்டு நிறுவனங்களின் கட்டணத்தில் 03 வீதம் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.