கோழிக் கறியில் இருந்த மண்!


மட்டக்களப்பில் (Batticaloa) பிரபல உணவகம் ஒன்றில் கோழிக் கறியில் கல்லீரலை சுத்தம் செய்யாது மண்ணுடன் வழங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து குறித்த உணவகத்தின் சமையலறை பகுதி பொறுப்பாளரை 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு  நீதிமன்ற நீதவான் நேற்று (4) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த உணவகத்தில் கடந்த மாதம் (25)ஆம் திகதி சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் கோழி கறியை வாங்கிச் சென்றுள்ளார்.

அதனை சாப்பிட எடுத்தபோது கோழியின் கல்லீரல் பகுதியை வெட்டி சுத்தம் செய்யாது மண்ணுடன் அப்படியே கறி சமைத்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், உணவகத்திற்கு கறியுடன் சென்று கறியில் மண்ணுள்ளமை தொடர்பாக தெரிவித்துள்ளதையடுத்து பொது சுகாதார அதிகாரிகளிடம் சென்று உணவகத்திற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். 

இது தொடர்பாக சமையலறை பகுதி பொறுப்பதிகாரிக்கு எதிராக நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார அதிகாரிகள் வழக்கு தாக்குதல் செய்திருந்தனர்.


இந்தநிலையில், வழக்கை விசாரணைக்கு எடுத்து நீதவான் குறித்த நபரை தண்டப்பணமாக 10 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.