ஜூலை 8 முதல் அக்னிவீர் திட்டத்தில் ஆட்சேர்ப்பு!


இந்திய ராணுவத்தின் முப்படை எனப்படும் விமானப்படை, தரைப்படை, கப்பல் படை ஆகியவற்றில் பணியாற்ற ஆண்டுதோறும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்.


அக்னிபாத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்கள், அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இந்த வீரர்கள் மொத்தம் 4 ஆண்டுகள் இந்திய ராணுவத்தின் முப்படைகளில் பணியாற்றுவர்.


இந்நிலையில் ராணுவத் தலைமையக ஒதுக்கீட்டின் கீழ் ராணுவ வீரர்களின் குழந்தைகள் அக்னிபத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான நிகழ்வு செகந்திராபாதில் உள்ள ராணுவத் தளவாடங்கள் மற்றும் பிற பொருட்களை விநியோகிக்கும் ஏஓசி அமைப்பின் தாப்பர் மைதானத்தில் ஜூலை 8 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறவுள்ளது.


அக்னிவீர் தொழில்நுட்பம், அக்னிவீர் அலுவலக உதவியாளர், 10-ம் வகுப்பு படித்துள்ள சமையல் கலைஞர், பல்வேறு துறை பணியாளர்கள், சலவைத் தொழிலாளி, 8-ம் வகுப்பு வரை படித்துள்ள பராமரிப்பு பணியாளர், சிறந்த விளையாட்டு வீரர் (பொதுப்பிரிவு) ஆகியோர் அக்னிவீர் திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர்.


விளையாட்டு வீரரின் திறனை சோதிப்பதற்காக விளையாட்டு வீரர்கள் தாப்பர் மைதானத்திற்கு ஜூலை 5 அன்று காலை 6 மணிக்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.


ஓட்டப்பந்தயம், நீச்சல், பளு தூக்குதல் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களது சான்றிதழ்களுடன் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


இந்த சான்றிதழ் இரண்டு ஆண்டு காலத்திற்கு முந்தையாக இருக்கக் கூடாது. அக்னிவீர் தொழில்நுட்பம், அக்னிவீர் அலுவலக உதவியாளர், 10-ம் வகுப்பு படித்துள்ள சமையல் கலைஞர், பல்வேறு துறை பணியாளர்கள், சலவைத் தொழிலாளி, 8-ம் வகுப்பு வரை படித்துள்ள பராமரிப்பு பணியாளர்களுக்கான வயது வரம்பு பதினேழரை வயது முதல் 21 வயதுக்குள் இருக்க வேண்டும்.


ஆட்சேர்ப்புக் குறித்த தகவல்களை www.joinindianarmy[at]nic[dot]in என்ற இணையதளத்தில் காணலாம். ஆட்சேர்ப்பு நிகழ்வு எந்தவிதக் காரணமும் இன்றி எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.