மாணிக்கக் கல் அகழ்ந்தவர்கள் கைது!!

 


நுவரெலியா - நோர்வூட் பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த 32, 33 மற்றும் 47 வயதுடைய 3  நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து மாணிக்கக் கல் அகழ்வு பணிக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.