விபச்சார விடுதியொன்றில் 4 பெண்கள் கைது!!


வவுனியாவில் உள்ள பகுதியில் விடுதியொன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை இன்றிரவு (19-07-2024) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதியொன்றில் சோதனை செய்த போது, அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் காலி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர்.

மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.