பொலிஸ் என்று ஆள்மாறாட்டம் செய்தவர் கைது!!

 


யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபரிடம் தன்னை பொலிஸ் உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்தி 3 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞளே இவ்வாரு கைதாகியுள்ளார்.

தன்னை பொலிஸ் புலனாய்வு பிரிவை சேர்ந்த உத்தியோகஸ்தர் என அடையாளப்படுத்திய சந்தேக நபர், நபர் ஒருவரை மிரட்டி 3 இலட்சம் ரூபா பணத்தினை கப்பமாக பெற்றுள்ளார்.


பணத்தினை கொடுத்த நபர் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

அதன் அடிப்படையில் இளவாலை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை நேற்று புதன்கிழமை (24) பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.