விமான நிலையத்தில் பெண்ணொருவர் கைது!!

 


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சீனப் பொண்ணொருவர் சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சட்டவிரோதமான சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் நேற்றிரவு மலேசியாவில் இருந்து இலங்கை வந்த போது கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 29,200 சிகரெட்டுகளை சுங்கத்தினர் கைப்பற்றியுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் 43 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.