நடிகர் விஜய் அன்ரனியுடன் சுயமி - வெளியான அறிவிப்பு!!
இலங்கை வந்துள்ள பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சியின் முன்னேற்பாடாக One Galle Face வணிக வளாகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) நடத்தப்பட்டது.
கொழும்பு சுகததாச உள்ளகரங்கில் செப்டெம்பர் 7ஆம் திகதி நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியின் முன்னேற்பாடாக இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது குறித்த இசை நிகழ்ச்சியின் promo வெளியிடப்பட்டது.
அத்துடன் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக 30,000 ரூபாய் பெறுமதியுடைய நுழைவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வோர்களுக்கு விஜய் ஆண்டனியுடன் (செல்ஃபி) புகைப்படம் எடுக்க வாய்ப்பும் வழங்கப்பட்டது.
அதேவேளை ஊடகவியலாளர்களே சந்திப்புக்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், விஜய் ஆண்டனியை காண ரசிகர்கள் நிரம்பியிருந்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt
கருத்துகள் இல்லை