வைத்தியர் அர்ச்சுனாவின் மற்றொரு மகத்தான செயல்!!

 


யாழ்ப்பாணம் - சாவச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியராக இருந்த அர்ச்சுனாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரதான பாரிய குற்றச்சாட்டை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார்.

அது தொடர்பில் அவர் வெளியிட்ட பதில், 

"நான் வைத்தியசால உணவை சாப்பிட்டது உண்மைதான் .. நோயாளர் சாப்பாடு அரியண்ட சாப்பாடு எண்டு வைத்தியர் யாரும் சாப்பிடுறேல்ல...

நான் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் வைத்தியசாலை உணவை சாப்பிடவில்லை. சட்டப்படி நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவை வைத்தியர்கள் சுவைத்துப் பார்க்க வேண்டும்.

நோயாளர்களுக்கு வழங்கப்படும் உணவை தான் நானும் உண்கிறேன் என்ற பயத்தில் நல்ல சாப்பாடு சமைக்கப்பட்டது.

இதனால் தான் வைத்தியசாலையில் நோயாளிகளிற்கும் நல்ல சாப்பாடு கிடைத்தது என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.