இலங்கையில் புதிய வகைப்பெற்றோல்!!
ஐஓசி நிறுவனம் 100 ஒக்டேன் ரக பெற்றோலை இன்று (02) சந்தைக்கு விநியோகிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
அமைச்சர் கஞ்சன விஜேசேகர டிவிட்டரில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதோடு , இலங்கை ஐஓசி நிறுவனத்தின் தலைவர்கள் குழுவொன்று தம்மை சந்தித்து கலந்துரையாடியதாக அமைச்சர் தெரிவித்தார்.
ஐஓசி எரிபொருள் நிலைய விஸ்தரிப்புத் திட்டம், மசகு எண்ணெய் சந்தை, எண்ணெய் தாங்கி வளாக அபிவிருத்தி, எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் உத்தேச இந்தியா-இலங்கை எரிபொருள் குழாய்த்திட்டம் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை