மதுபான விருந்தால் இடம்பெற்ற கொலை!!

 


ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குகுல்கடுவ பகுதியில் நண்பர்கள் மதுபான் விருந்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் மத்துகம பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய நபரொருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவர் மேலும் இரண்டு நண்பர்களுடன் இணைந்து மதுபானம் அருந்திக் கொண்டிருந்துள்ள நிலையில், நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் இடம்பெற்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில், ஹம்பேகமுவ பகுதியில் வசிக்கும் 25 மற்றும் 27 வயதுடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.