கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற பயங்கர விபத்து!!

   


சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே, இரட்டைக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில்  சுமார் 25 பேர் காயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த விபத்து இன்று (4) வியாழக்கிழமை காலை 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்றும்  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo .https://chat.whatsapp.com/Kdnm8UDbM1a7RTFL4JWfEG https://m.youtube.com/channel/UC6TOEvZd5VJyLB75nMkhFt

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.