கொழும்பில் பாரிய விபத்து!!


கொழும்பு, மாலம்பே - ஹோகந்தர பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் வயோதிபப் பெண்ணோருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து சம்பவம் நேற்றையதினம் (27-07-2024) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று பேருந்து தரிப்பிடத்தில் நின்றுகொண்டிருந்த வயோதிபப் பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மேலதிக விசாரணைகளைப் பொலிசார் ஆரம்பித்துள்ளனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.