சமையல் போட்டியில் அசத்திய இலங்கை பெண்!

 


அவுஸ்திரேலியாவில் பிரபலமான MasterChef Australia சமையல் போட்டியின் இறுதிப்போட்டிக்கு இலங்கையை சேர்ந்த சவிந்திரி பெரேரா என்ற பெண் தெரிவாகியுள்ளார்.


குறித்த சமையல் போட்டியில் இறுதியாக நடந்த சுற்றின் போது சவிந்திரி பெரேரா வாழை இலையில் உணவு வழங்கியிருந்தார். மேலும் அது பரிமாறப்பட்ட விதம் நடுவர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.


இதற்கு முன்னர் சவிந்திரி பெரேரா போட்டியின் ஒரு சுற்றில் விலக வேண்டியிருந்த போதிலும், ஏற்பாட்டுக் குழு மற்றும் நடுவர்கள் அவரை மீண்டும் போட்டியில் இணைத்துக் கொண்டனர்.


அவர் தயாரித்த  இலங்கை உணவுகளை நடுவர்கள் விரும்பி உட்கொண்டதால் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் சவித்திரி மீண்டும் தங்கள் இதயங்களில் நுழைந்துவிட்டதாக நடுவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.