சட்டப்படி தற்போதும் நான் தான் வைத்தியர் - வைத்தியர் அர்ச்சுனா தெரிவிப்பு!!

 


யாழ்ப்பாணம் - சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் சட்டத்தின் படி தற்போது நான் தான் என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே இதற்கான ஆதரத்தை கூறியுள்ளார்.


அந்த காணொளியில் வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்தாவது,


யாழ்ப்பாண தமிழ் சமூகத்தை குழப்பும் வகையிலான அரசியல் நடவடிக்கைகளை வைத்தியர் சமன் பத்திரன தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்.


இப்படியான நபர்களால் தான் தமிழ் சமூகத்துக்கு அழிவு ஏற்பட்டது.


சமூக மருத்துவத்தில் பட்டம் பெற்ற வைத்தியரான கோபாலமூர்த்தி ரஜீவை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக சமன் பத்திரன நேற்றையதினம் நியமித்துள்ளார்.


எனினும் அவருக்கு அதற்கான அதிகாரம் இல்லை” என தெரிவித்துள்ளார்.கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.